×

கும்பகோணம் அலங்கார அன்னை பேராலய தேர்பவனி: இன்று கொடியிறக்கத்துடன் விழா நிறைவு

கும்பகோணம்: கும்பகோணம் புனித அலங்கார அன்னை பேராலய தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காமராஜர் ரோட்டில் 348 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அலங்கார அன்னை பேராலயம் உள்ளது. இங்கு கடந்த 6ம் தேதி ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மாலை 6 மணிக்கு திருப்பலியும், சிறிய தேர்பவனியும், பல்வேறு தலைப்புகளில் அருட்தந்தையர்களால் மறையுரையும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்றிரவு நடைபெற்றது. முன்னதாக மாலை 6 மணிக்கு ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் ஆயர் மறையுரை ஆற்றினார். தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு புனித அலங்கார அன்னை ஆடம்பர தேர்பவனியை ஆயர் பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார். தேர்பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேராலயத்தை வந்தடைந்தது. இன்று (15ம் தேதி) காலை 8 மணிக்கு ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சுதந்திர தினவிழா மற்றும் திருப்பலி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியோடு ஆண்டு பெருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அலங்கார அன்னை பேராலய பங்குத்தந்தை பிலோமின்தாஸ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

The post கும்பகோணம் அலங்கார அன்னை பேராலய தேர்பவனி: இன்று கொடியிறக்கத்துடன் விழா நிறைவு appeared first on Dinakaran.

Tags : Kumbakonam Decorative Mother Cultural Thorbhavani ,Kumbakonam ,Kumbakonam Sacred Ornamental Mother Cultural Cultural Cultural Thorbhavani ,Christians ,Kumbakonam Decorative Mother Culture Turbhavani ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கூத்தாநல்லூர் கிளை இடமாற்ற விழா