
துபாய்: ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை அரங்கில் நேரில் காண டிக்கெட் பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. 25ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடங்க உள்ள நிலையில் டிக்கெட் பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. டிக்கெட் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்த நாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை இந்தியா முழுவதும் உள்ள 10 நகரங்களில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது.
அரையிறுதிப்போட்டிகள், இறுதிப்போட்டிகள் என மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது. டிக்கெட் ஆகஸ்ட் 25ம் தேதி டிக்கெட் தொடங்கும் என ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் டிக்கெட் வாங்கும் ரசிகர்கள் தங்களது விருப்பத்தினை பதிவு செய்யலாம் எனவும் விருப்பத்தின் அடிப்படையில் 25ம் தேதி முதல் நடைபெறும் டிக்கெட் விற்பனை பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் கொரியர் மூலமாக தங்களது இருப்பிடத்திற்கு என ஐசிசி தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 25ம் தேதி பயிற்சி போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட சூழலில் இந்திய அணி பங்கேற்காத பயிற்சி போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெறும் எனவும் ஆகஸ்ட் 30ம் தேதி இந்திய அணி விளையாடும் பயிற்சி போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை அரங்கில் நேரில் காண டிக்கெட் பெறுவதற்கான முன்பதிவு தொடக்கம் appeared first on Dinakaran.