
திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள 26 கோயில்களை சேர்ந்து மொத்தம் 2 கோடியே 17 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் ஆடி அஸ்வினி, ஆடி பரணியுடன் தெப்ப திருவிழா நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்து பல லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.
இந்தநிலையில், திருத்தணி முருகன் கோயில் மற்றும் அதன் உப கோயில்களாக உள்ள மொத்தம் 26 கோயில்களில் கிருத்திகை விழா முன்னிட்டு பக்தர்கள் கடந்த 11 நாட்களில் பக்தர்கள் செலுத்தியிருந்த உண்டியல் பணம் எண்ணும் பணி நேற்று திருத்தணி முருகன் மலைக்கோயில் தேவர் மண்டபத்தில் நடைபெற்றது. அறங்காவலர் குழு தலைவர் தரன், அறங்காவலர்கள் உஷார் ரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன், துணை ஆணையர் விஜயா ஆகியோர் முன்னிலையில், கோயில் பணியாளர்கள், பக்தர்கள் ஆகியோர் உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் மொத்தம் 2 கோடியே 17 லட்சத்து 97 ஆயிரத்து ரூபாய் 512 உண்டியல் காணிக்கை செலுத்தியிருந்தனர். இதுதவிர தங்கம் 345 கிராம், வெள்ளி 13 கிலோ இருந்தது. வங்கியில் உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்ட பணத்தை டெபாசிட் செய்யப்பட்டும் தங்கம் மற்றும் வெள்ளிகளை கோயில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
The post திருத்தணி முருகன் கோயிலில் ரூ2.17 கோடி உண்டியல் வசூல் appeared first on Dinakaran.