×

உலக செஸ்; காலிறுதி போட்டியில் கார்ல்சென்- குகேஷ் மோதல்

அஜர்பைஜானில் நடைபெறும் உலக கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், ஆ.பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி ஆகியோர் ஓபன் பிரிவில் காலி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். முந்தைய சுற்றில், குகேஷ் 1.5-0.5 என சீனாவின் வாங் ஹாவை வீழ்த்தினார். இதையடுத்து அவர் உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை காலிறுதியில் எதிர்கொள்கிறார். பிரக்ஞானந்தாவும் 1.5-0.5 என்ற கணக்கில் ஹங்கேரியின் பெர்க்ஸ் ஃபெரென்கை வென்று காலிறுதிக்கு வந்துள்ளார்.

அதில் அவர், சக இந்தியரான அர்ஜுன் எரிகைசியை சந்திக்கிறார். முன்னதாக அர்ஜுன் 1.5-0.5 என ஸ்வீடனின் கிராண்டெலியஸ் நீல்ஸை தோற்கடித்தார். விதித் குஜராத்தி-ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆட்டம் டிரா ஆக, டை பிரேக்கரில் விதித் குஜராத்தி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். காலிறுதியில் அவர், அஜர்பைஜானின் நிஜத் அபசோவை எதிா்கொள்கிறார். மகளிர் பிரிவில் டி.ஹரிகா-ரஷ்யாவின் அலெக்ஸாண்ட்ரா கோரியாச்கினா ஆட்டம் டிரா ஆகியிருப்பதால், டை-பிரேக்கரில் அவர்கள் மோத இருக்கின்றனர்.

The post உலக செஸ்; காலிறுதி போட்டியில் கார்ல்சென்- குகேஷ் மோதல் appeared first on Dinakaran.

Tags : World Chess ,Carlsen ,Kukesh ,India ,D.C. chess ,Azerbaijan ,World Cup Chess ,A. Praggnananda ,Arjun Erigaisi ,Chess ,Dinakaran ,
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிப்பு