×

தமிழகத்திற்கு 10 டிஎம்சி ‘தண்ணீர் திறந்து விட முடிவு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி

பெங்களூரு: தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி வரையில் காவிரியில் திறக்கபட வேண்டிய தண்ணீரை கர்நாடக அணையில் இருந்து வழங்கவில்லை என கூறி நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது. இந்த நிலையில், கர்நாடாக நீர்வளத்துறை அமைச்சர் 10 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அனைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

எப்படி இருந்தாலும் உச்சநீதிமன்றம் அணையில் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்க உத்தரவு பிறபிக்கும். இந்நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கர்நாடக காங்கிரஸ் அலுவலகத்தில் கொடியேற்றிய பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழகத்திற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த பணி ஏற்கனவே தொடங்கபட்டுவிட்டதாகவும், நேற்று மாலை முதலே கூடுதல் தண்ணீர் திறக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். கர்நாடக அணைகளில் இருந்து ஏற்கனவே 10,000 கனஅடி தண்ணீர் திறக்கபட்டு வந்தது. இந்த நிலையில், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து கூடுதலாக 4,000 கனஅடி தண்ணீர் திறக்கபட்டது. மொத்தம் 14,000 கனஅடி தண்ணீர் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

The post தமிழகத்திற்கு 10 டிஎம்சி ‘தண்ணீர் திறந்து விட முடிவு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : 10 TMC for Tamil Nadu ,Karnataka ,Deputy Chief Minister ,D.C. K.K. Shivakumar ,Bengaluru ,Government of Tamil Nadu ,Kaviri ,10 TMC ,Tamil Nadu ,D. K.K. Shivakumar ,
× RELATED ஆபாச வீடியோக்களை வெளியிட்டது யார்?.....