×

நத்தத்தில் சல்பேட் கலந்த பால் குடித்த 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி: போலீசார் விசாரணை

 

நத்தம், ஆக. 15: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் சேக் அப்துல்லா. கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராபிக் (23). இவர்களுக்கு இனாமல் ஸசன் (4) மற்றும் பாத்திமா என்ற 10 மாத கைக்குழந்தை உள்ளது. மேலும் இவர்களது வீட்டிற்கு நத்தம் அம்மாபட்டியைச் சேர்ந்த இவரது உறவினர் புரோஸ்கான் குழந்தைகள் முகமது சுகைல் (11), முகமது சுனைல் (4) ஆகிய 2 பேரும்வந்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு ராபிக் குழந்தைகளுக்கு வழக்கம் போல பால் கொடுத்துள்ளார்.

அதனை குடித்த 4 குழந்தைகளுக்கும் அடுத்தடுத்து உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ராபிக் குழந்தைகளை மருத்துமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தார்.
இதனை தொடர்ந்து பாலை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது பாலில் சர்க்கரைக்கு பதிலாக மெக்சீனியம் சல்பேட் என்ற வேதிப்பொருளை கலந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 4 குழந்தைகளுக்கும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post நத்தத்தில் சல்பேட் கலந்த பால் குடித்த 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Nathdal ,Nadham ,Sheikh Abdullah ,Nutham Muslim Street, Dindigul District ,Dinakaran ,
× RELATED நத்தத்தில் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு