×

பூவனூர் பிரதோஷ நாயகருக்கு வௌ்ளிக்கவசம் அணிவிப்பு

நீடாமங்கலம், ஆக.15: பூவனூர் சதுரங்க வல்லபநாதர் சுவாமி கோயிலில் பிரதோஷ நாயகருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள பூவனூர் சதுரங்க வல்லபநாதர் சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் மாலை பிரதோஷ நாயகருக்கு (பிரதோஷ உட்சவ மூர்த்திகள்) வெள்ளிக்கவசம் சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. வெள்ளி கவச ஏற்பாடுகளை உபயதாரர்கள் செய்திருந்தனர். கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி, சிமுண்டீஸ்வரி அம்மன் சாமிகளுக்கும் ஆராதனை நடந்தது.

நிகழ்ச்சியில் திருப்புகலூர் வேளக்குறிச்சி ஆதீன இளவரசு, ஜோதிமலை இறைபணி மன்ற கூட்ட தலைவர் திருவடிக்குடில் சுவாமிகள் மற்றும் செயல் அலுவலர் மணிகண்டன், தக்கார் மாதவன் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post பூவனூர் பிரதோஷ நாயகருக்கு வௌ்ளிக்கவசம் அணிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Bhuvanur Pradosha Nayakam ,Needamangalam ,Pradosha Nayak ,Bhuvanur Chaturanga Vallabanathar Swamy Temple ,Tiruvarur ,Bhuvanur Pradosha Nayak ,
× RELATED நீடாமங்கலத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்