×

தமிழக விவசாயிகளுக்கு நவம்பர் மாதத்தில் சம்பா பருவத்துக்கு தேவையான உரம் தடையின்றி கிடைக்கும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக சம்பா பருவத்தில் 13.747 லட்சம் எக்டரில் நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிட்டதில், இதுநாள் வரை 9.717 லட்சம் எக்டர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பா நடவுப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதால், குறித்த காலத்தில் உரங்களை விநியோகிக்கும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உர கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு உரம் தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனியார் உரக்கடை உரிமையாளர்கள் யாரும் விவசாயிகள் கேட்காத உரங்களை வாங்க நிர்பந்திக்கக்கூடாது என எச்சரிக்கப்படுகிறார்கள். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உர இருப்பு வித்தியாசம், சரியாக இருப்பு பதிவேடுகள் பராமரிக்காமை மற்றும் “ஓ” படிவம்  ஒப்புதல் பெறாமல் உரம் விற்பனை செய்தல் ஆகிய குறைபாடுகளுக்காக 64 உரக்கடைகளுக்கு தற்காலிக விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஒன்றிய அரசிற்கு அக்டோபர் மாதம் 22ம் தேதி எழுதிய கடிதத்தினை தொடர்ந்து  ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு நவம்பர் மாதத்திற்கு தேவையான  யூரியா 1,24,750 மெ. டன்,  டிஏபி 34,350 மெ. டன், பொட்டாஷ் 11,500 மெ. டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 85,900 மெ. டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நவம்பர் மாதத்தில் சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் தங்கு தடையின்றி சீராக கிடைக்க  உரக்கடைகளில் ஆய்வு, செய்து தொடர்ந்து கண்காணிக்கப்படும்….

The post தமிழக விவசாயிகளுக்கு நவம்பர் மாதத்தில் சம்பா பருவத்துக்கு தேவையான உரம் தடையின்றி கிடைக்கும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Minister ,M. R.R. K.K. Pannerisselvam ,Chennai ,Tamil Nadu ,M. R.R. K.K. ,Bannerselvam ,M. R.R. K.K. Bannerselvam ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...