×

கூடலூரில் கலைஞர் நூற்றாண்டு விழா பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கல்

 

கூடலூர், ஆக.15: கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி பென்னை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று பென்னை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.

முன்னதாக கலைஞர் கருணாநிதியின் உருவ படத்திற்கு தலைமை ஆசிரியர் முருகேசன் மற்றும் மாணவ-மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் கலைஞர் ஆட்சி காலத்தில் அவர் கல்விக்காக செய்த திட்டங்கள் பற்றியும், சாதி-மத பேதமற்ற சமத்துவம் உள்ள இடமாக பள்ளிகள் மாற வேண்டும் என ஆற்றிய பணிகள் குறித்தும் மாணவர்கள் மத்தியில் பேசப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள் ஷெரின், நஸ்ரின் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post கூடலூரில் கலைஞர் நூற்றாண்டு விழா பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Artist Centenary School ,Kudalur ,Karunanidhi ,Pennai Panchayat Union Primary School.… ,
× RELATED கூடலூரில் 110 கேவி., திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்