×

கழிவுநீர் கால்வாய் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

 

சிவகங்கை, ஆக.15: சிவகங்கை நகராட்சி பிள்ளையார்கோவில் தெருவில், தார்ச்சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: நகராட்சி 4வது பிள்ளையார்கோவில் தெருவில் சாலை அமைத்து 15ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ரயில்வே ஸ்டேசனுக்கு செல்லும் இணைப்புச் சாலையாக உள்ள இச்சாலை குறிப்பிட்ட தூரம் பேவர் பிளாக் சாலையும், எஞ்சிய பகுதி தார்ச்சாலையாகவும் உள்ளது. இச்சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக சாலையை தோண்டும் நடைபெற்றது.

ஆனால் அதன் பின்னர் பல ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் சாலை இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் சேதமடைந்துள்ளது. மழை நேரங்களில் கழிவுநீர் இந்த தெருவில் ஆறு போல் ஓடுகிறது. வீடுகளுக்குள்ளும் கழிவுநீர் புகுந்து விடுகிறது. இதனால் கடும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே இத்தெருவில் புதிய தார்ச்சாலை அமைக்கவும், கழிவுநீர் கால்வாய் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post கழிவுநீர் கால்வாய் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Piliyarkovil Street ,tarchala ,Dinakaran ,
× RELATED திருப்புவனம் பகுதிக்கு நிலையான...