×

பள்ளி விளையாட்டு விழா

 

பல்லடம், ஆக.15: பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தில் ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். முதல்வர் விஜயராஜன் வரவேற்றார். இவ்விழாவில் பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். தடகள போட்டியில் மாணவர்களின் பிரிவில் இந்த ஆண்டிற்கான ஒட்டுமொத்த சாம்பியனாக வருணா அணியும், மாணவிகள் பிரிவில் அக்னி அணி வீராங்கனைகள் இந்த ஆண்டிற்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு பள்ளி தாளாளர் கிருஷ்ணன் கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார். முடிவில் பள்ளி துணை முதல்வர் அஜித்தா,விளையாட்டு ஆசிரியர் ஆனந்தன், ஆகியோர் நன்றி கூறினர்.

The post பள்ளி விளையாட்டு விழா appeared first on Dinakaran.

Tags : School Sports Festival ,Palladam ,Jayanthi Matric High School Sports Festival ,Arulpuram ,Dinakaran ,
× RELATED பல்லடம் அருகே கடன் தொல்லையால்...