×

புதிய மின்மாற்றி அமைப்பு

 

சின்னமனூர், ஆக. 15: சின்னமனூர் அருகே அய்யம்பட்டி கிராம ஊராட்சியில் சுமார் 5000க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்கு நான்கு மின்மாற்றிகள் உதவியுடன் சுமார் 1200க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், விவசாய தோட்டங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அய்யம்பட்டியில் உள்ள மின்மாற்றி அடிக்கடி பழுதாகி வந்தது. இதனால் வீடுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மின் விநியோகம் துண்டிக்கப்படுவது தொடர்கதையானது. இதையடுத்து புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் எதிரொலியாக நேற்று பழைய மின்மாற்றி அகற்றப்பட்டு ரூ.5 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

The post புதிய மின்மாற்றி அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Chinnamanur, Ag. ,Ayambatti ,Chinnamanur ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்