திருச்சுழி, ஆக.15: காரியாபட்டி அருகே மாந்தோப்பு கிராமத்தில் குறுங்காடு வளர்ப்பு திட்டம் துவக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட கலெக்டரின் ஆலோசனையின்பேரில் அனைத்து ஊராட்சிகளிலும் குறுங்காடுகள் திட்டத்தில் மரக்கன்றுகள் நடும்பணி நடைபெற்று வருகிறது. காரியாபட்டி மாந்தோப்பு ஊராட்சி மற்றும் கிரீன் பவுண்டேசன் சார்பாக மாந்தோப்பு அரசு பள்ளி வளாகத்தில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் காளீஸ்வரி சரவணன் தலைமை வகித்தார்.
கிரீன் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம் முன்னிலை வகித்தார். சட்ட ஆலோசகர் செந்தில்குமார் குறுங்காடு திட்டத்திற்கு மரக்கன்றுகள் நடும்பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதற்கட்டமாக குறுங்காடு அமைக்க கிராம மக்கள் ஒன்று சேர்ந்து 150 மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பணித்தள பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் மற்றும் கிரீன் பவுண்டேசன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.
The post குறுங்காடு வளர்ப்பு திட்டம் துவக்கம் appeared first on Dinakaran.