×

சவுதி அரேபியாவில் இறந்த கணவர் உடலை மீட்டுக் கொண்டு வரவேண்டும் குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு

நாகர்கோவில், ஆக.15: மணக்குடியைச் சேர்ந்த ஆரோக்கிய மேரி என்பவர் நேற்று பங்குத்தந்தை டங்ஸ்டன் தலைமையில் குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நான் கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியில் வசித்து வருகிறேன். எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர். நான் வறுமையில் இருக்கிறேன். எனக்கும் உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வருகிறேன். குடும்ப சூழ்நிலை காரணமாக எனது கணவர் அருள் ஜெயசீலன் (48) மீன்பிடி தொழிலுக்காக வெளிநாடு சென்றார். 1.4.2023 அன்று மணக்குடியிலிருந்து புறப்பட்டு சவுதி அரேபியாவின் கிரான் என்ற இடத்திற்கு மீன்பிடி தொழிலுக்கு சென்றார்.

அங்கு சென்று 4 மாதங்களே ஆனநிலையில் 10.08.2023 அன்று தொழிலுக்கு செல்வதற்காக என்ஜின் மற்றும் தராத் – தை சரி செய்வதற்காக சென்றுள்ளார். அந்த நேரம் திடீரென்று ஏற்பட்ட நெஞ்சுவலியால் யாரிடமும் எதுவும் சொல்லாமலே தராத்தில் படுத்துக்கிடந்து அதன்பிறகு பார்த்த மக்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். மருத்துவர்கள் எனது கணவரை பரிசோதித்துவிட்டு, அவர் இறந்து விட்டார் என்று தெரிவித்தனர் . மாரடைப்பு ஏற்பட்டுதான் அவர் இறந்துள்ளார் என்று தகவல் தெரிவித்தனர். எனது கணவர் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post சவுதி அரேபியாவில் இறந்த கணவர் உடலை மீட்டுக் கொண்டு வரவேண்டும் குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Saudi Arabia ,Nagercoil ,Arogya Mary ,Manakudi ,Kumari District Collector ,Tungsten ,
× RELATED சென்னையிலிருந்து தனி விமானம் மூலம்...