×

நீட் தேர்வு டாக்டரை உருவாக்கும் என்றால்… இத்தனை ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் டுபாக்கூரா? ஒன்றிய அரசுக்கு முதலாமாண்டு மாணவன் சரமாரி கேள்வி

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் நீட் தேர்வில் 400 மதிப்பெண் பெற்றார். ஆனால் அவருக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவனின் நண்பரான எம்பிபிஎஸ் முதலாமாண்டு படித்து வரும் மாணவன் பயாஸ்தீன் அளித்த பேட்டி: நான் ஓப்பனாக சொல்கிறேன். நீட் தேர்வில் நான் ‘ஜஸ்ட் பாஸ்’ தான். அதாவது 160 மதிப்பெண் மட்டுமே எடுத்தேன். ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் ரூ.25 லட்சம் பணம் கட்டி மருத்துவ படிப்பில் சேர்ந்துவிட்டேன். இதில் முரண்பாடு என்னவென்றால், காசு இருப்பவன் டாக்டராகிவிட முடியும் என்றால், அடுத்தது அந்த டாக்டர் என்ன எதிர்பார்ப்பார்? டாக்டர் படிப்புக்கு செலவிட்ட காசை எடுப்பதில் தான் கவனமாக இருப்பானே தவிர, மக்களுக்கு சேவை செய்வதில் இருக்க மாட்டான்.

இப்போது நீட் தான் உண்மையான தேர்வு, டாக்டரை உருவாக்கும் தேர்வு என்றால், இத்தனை நாட்கள் நீங்கள் பார்த்த டாக்டர்களை டுபாக்கூர் என்று நினைக்கிறீர்களா. என்னைவிட இரண்டு நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவன். அவனாலேயே டாக்டருக்கு சேர முடியவில்லை என்றால், பொருளாதார அடிப்படையில் தான் மருத்துவ படிப்பு இருக்கிறது என்று சொல்ல தோன்றுகிறது. அவன் 400 மதிப்பெண் எடுத்துள்ளான். அவனால டாக்டருக்கு சேர முடியவில்லை. டாக்டர் ஆகவேண்டும் என்று அவன் நீட் பயிற்சி பெற்றான்.

மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்றுதான். 2 முறை முயற்சி செய்தார். மூன்றாவது ஆண்டு தான் எனது அப்பாவுக்காக நான் டாக்டர் ஆகவேண்டும் என்று சொன்னான். ெவளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் இருந்து அழைப்பு வந்தது. அவனுக்கு ஒரே காரணம் அவன் அப்பாவுடன் இருந்து தமிழ்நாட்டில் படிக்கவேண்டும் என்பது தான். எனக்கு 15 நாட்களுக்கு முன்பு போன் செய்து மருத்துவ படிப்பு எங்களுக்கு கனவு டா. படித்து முடித்துவிட்டு மக்கள் பணியில் இரு டா என்று சொன்னான்’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* அமைச்சரிடம் முறையிட்ட மாணவன்
தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் உதயநிதியிடம் சென்ற மாணவன் பாயாஸ்தீன், ‘‘நீட்டை எதிர்த்து நாம் எதையும் பண்ண முடியாதா சார். நீங்கள் தான் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். இது ஒருமுறை அல்ல. இன்னும் எத்தனை ஜெகதீஸ் மற்றும் எத்தனை அனிதாவை நாம் இழக்க போகிறோம். ஒவ்வொரு முறையும் இதே கோரிக்கை தான் சார். 12ம் வகுப்பு முடித்துவிட்டு நீட் ,ேஜ.இ என்று ஒவ்வொரு நுழைவு தேர்வுனு எதுக்கு 12ம் வகுப்பு படிக்கிறோம் என்று எங்களுக்கு தெரியவில்லை. ஆளுநருக்கு எதிராக உங்களால் எதுவும் செய்ய முடியாதா’’ என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். அப்போது அவருக்கும், அவருடன் இருந்த மாணவர்களுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

The post நீட் தேர்வு டாக்டரை உருவாக்கும் என்றால்… இத்தனை ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் டுபாக்கூரா? ஒன்றிய அரசுக்கு முதலாமாண்டு மாணவன் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Union Govt. ,CHENNAI ,Jagadeeswaran ,Chrompettai, Chennai ,NEET ,Union Government ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...