×

சந்திரயான்-3 சுற்றுவட்ட பாதை மேலும் குறைப்பு இஸ்ரோ தகவல்

சென்னை: சந்திரயான்-3 விண்கலத்தின் நிலவு சுற்றுவட்ட பாதை மேலும் குறைக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவு: நிலவின் மேற்பரப்பை மேலும் நெருங்கியுள்ளோம், சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை 150 கி.மீ. x 177கி.மீ. தூரத்துக்கு குறைக்கப்படுள்ளது. அடுத்த சுற்றுவட்டபாதையை குறைக்கும் பணிகள் நாளை காலை 8:30 மணிக்கு நடைபெறும். தொடர்ந்து ஆக. 23ம் தேதி வரை நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து நிலவின் அருகே பயணிக்கும். பின்பு அன்றைய தினமே செயற்கைக்கோளை தரையிறக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் புரொப்பலன்சன் மாட்யூல் இயக்கப்பட்டு நிலவிற்கு அருகில் சென்று அங்கிருந்து விக்ரம் லேண்டர் தரையிறக்கும் பணி தொடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சந்திரயான்-3 சுற்றுவட்ட பாதை மேலும் குறைப்பு இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,ISRO ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...