×
Saravana Stores

ரூ.17 கோடி ஊசி வாங்க முடியாததால் 6 மாத குழந்தை பலி

திருப்பந்தூர்: ரூ.17 கோடி மதிப்பிலான ஊசி செலுத்த முடியாததால் 6 மாத பெண் குழந்தை உயிரிழந்தது. திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த வசந்தபுரத்தை சேர்ந்தவர் தீபன்(36). தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி ரம்யா (31). 6 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. முதல் குழந்தை பிறந்து இறந்தநிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு தம்பதிக்கு 2வதாக பெண் குழந்தை பிறந்தது. 3 மாதத்தில் குழந்தையின் கால்களில் அசைவு ஏற்படாமல், கழுத்தும் நிற்காமல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த பெற்ேறார் குழந்தையை மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர்.

இதற்கிடையில், தீபன் கொரோனா தொற்று பாதித்து மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில், குழந்தைக்கு அரியவகை நோயான ‘ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி’ வகை 1 பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதற்கு ரூ.17 கோடி மதிப்பிலான மருந்தை ஊசி மூலம் ெசலுத்த வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் மனவேதனை அடைந்த ரம்யா, 6 மாத கைக்குழந்தையுடன் கடந்த மாதம் 31ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நிதிஉதவி கேட்டு மனு அளித்தார். கலெக்டர் இது தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதற்கிடையில், குழந்தை நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தது.

The post ரூ.17 கோடி ஊசி வாங்க முடியாததால் 6 மாத குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Tirupandur ,Tirupattur district ,Kurisilapattu ,Dinakaran ,
× RELATED ஜோலார்பேட்டை வாரச்சந்தையில் தீபாவளி...