×

நடைபயணத்துக்காக தினமும் அண்ணாமலை ரூ.1 கோடி செலவு: மாணிக்கம் தாகூர் எம்.பி பகீர்

சிவகாசி: நடைபயணத்திற்காக அண்ணாமலை தினமும் ரூ.1 கோடி செலவு செய்து வருகிறார். இதற்கான கணக்கு வழக்கை அவர் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்துள்ளார். விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் நேற்று அளித்த பேட்டி: நாங்குநேரியில் நடந்தது போன்ற சம்பவங்கள் மீண்டும் தமிழகத்தில் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வெறுப்பு அரசியலின் மையமாக இருக்கக் கூடிய பல அமைப்புகள் இதுபோன்ற சம்பவங்களை பயன்படுத்தி குளிர்காய நினைக்கின்றன. வெறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில் மத மற்றும் சாதி அமைப்புகள் ஈடுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதை தடுக்கும் வகையில் அரசு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆளுநரின் அநாகரீக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நடைபயணத்திற்காக தினமும் ரூ.1 கோடி வரை செலவு செய்கிறார். இதற்கான கணக்கு வழக்கை பொதுவெளியில் அவர் வெளியிட வேண்டும். பட்டாசு தொழிலை தொடர்ந்து 9 ஆண்டுகளாக சீர்குலைத்தது பாஜ அரசு. அதிலிருந்து எழ முடியாமல் சிவகாசி தத்தளித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post நடைபயணத்துக்காக தினமும் அண்ணாமலை ரூ.1 கோடி செலவு: மாணிக்கம் தாகூர் எம்.பி பகீர் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Manikam Tagore ,MP Bagir ,Sivakasi ,Bhagir ,
× RELATED ஒன்றிய அமைச்சர் பங்கேற்ற அரசு விழா...