×

மாமல்லபுரம் அருகே கடல்நீரை சுத்திகரிக்கும் மூன்றாவது ஆலை: அமைச்சர்கள் ஆய்வு

மாமல்லபுரம்: கடல்நீரை சுத்திகரிக்கும் 3வது ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். மாமல்லபுரம் அடுத்த பேரூரில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ரூ.4,276.44 கோடி மதிப்பில் 400 மில்லியன் லிட்டர் அளவு சுத்திகரிப்பு செய்யும் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலைக்கு வரும் 21ம் தேதி காலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார். இதற்காக, நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தில் சாலை அமைக்கும் பணி, மேடை அமைக்கும் பணி, முதல்வர் வரும் சாலை உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

இந்நிலையில், அங்கு நடந்து வரும் மேம்பாட்டு பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அனைத்தும் பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டனர். அப்போது, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நீர் ஆதாரமாக விளங்கும் ஏரி, குளங்களை போர்க்கால அடிப்படையில் தூர் வாரி மழை நீர் தேங்கி உள்ளூர் மக்களுக்கும், சென்னையில் உள்ள மக்களுக்கும் தேவையான குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் செயல்பட வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு அதிகாரிகளுக்கு அறுவுறுத்தினார்.

ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மை செயலாளர் கார்த்திகேயன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மாவட்ட எஸ்பி சாய்பிரணீத், திருப்போரூர் சேர்மன் இதயவர்மன், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட பொருளாளர் விசுவநாதன், திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post மாமல்லபுரம் அருகே கடல்நீரை சுத்திகரிக்கும் மூன்றாவது ஆலை: அமைச்சர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : seawater ,plant ,Mamallapuram ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...