×

பள்ளிப்பட்டு அரசு பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு பின் பழைய மாணவர்கள் சந்திப்பு: நினைவுகளை பகிர்ந்து உற்சாகம்

பள்ளிப்பட்டு:திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு பள்ளியில் 1972-73ம் கல்வி ஆண்டில் பழைய எஸ்எஸ்எல்சி படித்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பள்ளி கல்வி முடித்து உயர்கல்வி, வேலைவாய்ப்புதேடி பிரிந்து சென்றுவிட்டனர். பெரும்பாலானோர் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றனர். 17 வயதில் பிரிந்து 67 வயதில் முதியவர்களாக படித்த பள்ளியில் மீண்டும் சந்திக்க முயற்சிக்கு அவர்களது குடும்பத்தினர் முழு ஆதரவு தந்தனர். பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தவர்களை ஒருங்கிணைப்பதோடு 90 வயது கடந்த அவர்களின் ஆசிரியர்களை விழாவில் பங்கேற்க ஏற்பாடு செய்திருந்தனர்.

பள்ளிப்பட்டு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்த சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க மற்றவர்கள் உதவியுடன் வந்திருந்த 35 முன்னாள் மாணவ, மாணவியர் ஒருவரை ஒருவர் அடையாளம் காணவே கடினமாக இருந்தாலும் அவர்களின் பேச்சு, பழக்கத்தை வைத்து அடையாளம் கண்டு, மீண்டும் மாணவர்களாக மாறி தங்களது பள்ளி அனுபவங்கள், ஆசிரியர்கள், குடும்பம், வேலை, ஒய்வுக்குப்பின் வாழ்க்கை குறித்து மனம்விட்டு பேசி பெரும் மகிழ்ச்சியடைந்தனர். முன்னதாக 90 வயதைக் கடந்த நிலையில் உள்ள ஆசிரியர்களை நிகழ்ச்சிக்கு வரவேற்று நினைவு பரிசுகள் வழங்கி முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஆசிப்பெற்றனர்.

The post பள்ளிப்பட்டு அரசு பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு பின் பழைய மாணவர்கள் சந்திப்பு: நினைவுகளை பகிர்ந்து உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Pallipatta Government School ,Pallipattu ,SSLC ,Thiruvallur ,Pallipattu Government School ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை