×

சுதந்திர தின விழாவை முன்னிட்டு 32 கோயில்களில் இன்று சமபந்தி விருந்து: அமைச்சர்கள், பொதுமக்கள் பங்கேற்பு

சென்னை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னையில் இன்று அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமபந்தி விருந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 32 கோயில்களில் நடக்கிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோயில்களில் பொது விருந்து நடத்துவது வழக்கம். அதன்படி சென்னையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இன்று பொது விருந்து நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு மற்றும் விருந்து நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கையின் மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 32 கோயில்களில் ஒவ்வொரு அமைச்சர்கள் கலந்துகொள்ளும் பொதுவிருந்து நடக்கிறது. அதன் விவரம் வருமாறு:

* திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில் – அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
* தேனாம்பேட்டை, பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் – சட்டப் பேரவை தலைவர் அப்பாவு.
* அடையாறு, ஆனந்த பத்மநாப சுவாமி கோயில்- நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு.
* மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி.
* திருவான்மியூர் மருதீஸ்வரர் கோயில் – வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.
* பெசன்ட் நகர், மகாலட்சுமி கோயில் – வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.

* வடபழனி முருகன் கோயில் – மனிதவள வேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.
* வேளச்சேரி, தண்டீஸ்வரர் கோயில் – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
* திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் – மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
* அரண்மனைக்கார தெரு, கச்சாலீஸ்வரர் கோயில் – தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.
* தம்புசெட்டி தெரு, காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோயில் – கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்.
* பள்ளியப்பன் தெரு, அருணாச்சலேஸ்வரர் கோயில் – பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி.
* வில்லிவாக்கம், சவுமிய தாமோதரப்பெருமாள் கோயில் – அரசு தலைமை கொறடா செழியன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சுதந்திர தின விழாவை முன்னிட்டு 32 கோயில்களில் இன்று சமபந்தி விருந்து: அமைச்சர்கள், பொதுமக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Samabandhi ,Independence Day ,Chennai ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...