×

மின்சாரம் தாக்கி மாடு பலி

ஆவடி,: ஆவடி சின்னம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணமூர்த்தி(49). பால் வியாபாரி. இவர் வீட்டில் 15 பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆடி மாதத்தை முன்னிட்டு கடும்பாடி அம்மன் கோவில் திருவிழாவிற்கு அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தது. அந்த வழியாக சென்ற பசுமாடு மீது மின்சாரம் பாய்ந்தது சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து உயிரிழந்தது. நேற்று முன் தினம் இரவு பலத்த மழை காரணமாக மின் கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கியது தெரியவந்தது. அப்பகுதி மக்கள் மின்சார அலுவலகத்துக்கும் காவல்துறைக்கும் புகார் கொடுத்தனர். மின் ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பைத் துண்டித்து மின் கசிவை சரி செய்தனர்.

The post மின்சாரம் தாக்கி மாடு பலி appeared first on Dinakaran.

Tags : Awadi ,Awadi Chinnamman ,Temple Street ,Lakshmanamurthi ,Dinakaran ,
× RELATED மனைவியை தாக்கிய கணவன் கைது