×

மான்ட்ரியல் ஓபன் டென்னிஸ்: பெகுலா சாம்பியன்

மான்ட்ரியல்: கனடாவில் நடந்த மான்ட்ரியல் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் லியுட்மிலா சாம்சனோவாவுடன் (24 வயது, 12வது ரேங்க்) மோதிய பெகுலா (29 வயது, 3வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-1, 6-0 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கோப்பையை கைப்பற்றினார். இப்போட்டி வெறும் 49 நிமிடத்தில் முடிவு வந்தது குறிப்பிடத்தக்கது. பெகுலா வென்ற 2வது டபுள்யு.டி.ஏ 1000 அந்தஸ்து சாம்பியன் பட்டம் இது. 2023 சீசனில் அவர் வென்ற முதல் பட்டமும் இது தான்.

The post மான்ட்ரியல் ஓபன் டென்னிஸ்: பெகுலா சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Montreal Open Tennis ,Pegula ,Montreal ,Canada ,Jessica Pegula ,America ,Dinakaran ,
× RELATED சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ஜெஸிகா பெகுலா