×

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடக்க இருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது

சென்னை: கிண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ராஜ்பவனில் உள்ள மெயின் புல்வெளிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இடியுடன் கூடிய மழை நாளையும் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து தகவல் தெரிவித்துள்ளது.

கனமழையைக் கருத்தில் கொண்டும், விருந்தினர்களுக்கு சிரமத்தைத் தவிர்ப்பதற்காகவும், ராஜ் பவன் அட் ஹோம் ரிசப்ஷனை ஒத்திவைக்க முடிவு செய்தது. இருப்பினும், அட் ஹோம் ரிசப்ஷன்” விரைவில் நடத்தப்படும், மேலும் தேதி சரியான நேரத்தில் தெரிவிக்கப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

சுதந்திரநாளையொட்டி ஆளுநர் மாளிகையில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட திமுக கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் தேநீர் விருந்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும், கனமழை எச்சரிக்கை காரணமாக தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தேநீர் விருந்து நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடக்க இருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது appeared first on Dinakaran.

Tags : Governor's House ,Chennai ,Rajbhawan ,Kindi ,Tea Party ,Governor House ,
× RELATED மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது பெண் ஊழியர் பாலியல் புகார்