×

‘லே’ பகுதியில் சிக்கி இருந்த மலையேறும் வீரர் உயிருடன் மீட்டு

லடாக்: உயரமான மலைப் பிரதேசமான லடாக்கின் எம்டி நன் தள முகாமில் இருந்து, மலையேறும் வீரர் ஒருவர் மலையேறினார். ஆனால் அவர் குறிப்பிட்ட தூரத்தில் சிக்கிக் கொண்டார். தகவலறிந்த மக்கள் தொடர்பு அதிகாரி, விமானப்படைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரை எடுத்துக் கொண்டு, உயரமான மலைப்பகுதியில் காயத்துடன் சிக்கியிருந்த மலையேறு வீரரை உயிருடன் காப்பாற்றினர். இந்த மீட்பு நடவடிக்கையின் வீடியோ, படங்கள் வெளியாகி உள்ளது. அதில், ‘இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் யூனிட், ‘லே’ மலைப்பகுதியில் சிக்கியிருந்த மலையேறுபவரை பத்திரமாக மீட்டது’ என்று தெரிவித்துள்ளது. இந்த வார தொடக்கத்தில், மார்கா பள்ளத்தாக்கில் சிக்கிய 5 பணியாளர்களை விமானப்படை மீட்டது குறிப்பிடத்தக்கது.

The post ‘லே’ பகுதியில் சிக்கி இருந்த மலையேறும் வீரர் உயிருடன் மீட்டு appeared first on Dinakaran.

Tags : Leh ,Ladakh ,MT Nan Tala ,Dinakaran ,
× RELATED காஷ்மீர் முதல் டெல்லி வரை 100 பேர் 1000...