×

20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு நத்தம் அருகே மீன்பிடி திருவிழா: கட்லா, கெண்டையை அள்ளிச் சென்றனர்

நத்தம்: நத்தம் அருகே நேற்று நடந்த மீன்பிடி திருவிழாவில், 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். கட்லா, கெண்டை, ஜிலேப்பியை அள்ளிச் சென்றனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கருத்தலக்கம்பட்டியில் சத்திரக்குளம் உள்ளது. இந்த குளம் கடந்தாண்டு பெய்த மழையால் முழுமையாக நிரம்பியது. தற்போது இந்த குளத்தில் தண்ணீர் குறைந்ததால் மீன்பிடி திருவிழா நடத்துவது என ஊர் பெரியவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை மீன்பிடி திருவிழா தொடங்கியது. இதில் நத்தம், கோட்டையூர், கருத்தலக்கம்பட்டி, கும்பச்சாலை, கோசுகுறிச்சி, அரவங்குறிச்சி, சேத்தூர், குரும்பபட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூடை, வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடித்தனர். இதில், பலருக்கு கட்லா, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை, பாறை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தன. இந்த மீன்களை வீடுகளுக்கு எடுத்துச் சென்று சமைத்து மகிழ்ந்தனர்.

The post 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு நத்தம் அருகே மீன்பிடி திருவிழா: கட்லா, கெண்டையை அள்ளிச் சென்றனர் appeared first on Dinakaran.

Tags : Natham ,Katla ,Nattam ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...