×

நாம் தனி நபர்கள் அல்ல மிகப்பெரிய சமூகத்தின் ஒரு அங்கம் என்பதை சுதந்திர தினம் நமக்கு நினைவூட்டுகிறது: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை

டெல்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். எல்லா இடங்களிலும் திருவிழா சூழலை காணும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் தனி நபர்கள் அல்ல மிகப்பெரிய சமூகத்தின் ஒரு அங்கம் என்பதை சுதந்திர தினம் நமக்கு நினைவூட்டுகிறது. இந்த சமூகம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் குடிமக்களை கொண்டது. ஜாதி, மதம், மொழி மாநிலம் ஆகியவற்றை கடந்து நமக்கெல்லாம் ஒரு அடையாளம் உள்ளது. காந்தி உள்ளிட்டோர் நாட்டின் ஆன்மாவை மீண்டும் எழுப்பியதோடு நமது மிகப்பெரிய நாகரிகத்தை எடுத்துரைத்தனர்

 

The post நாம் தனி நபர்கள் அல்ல மிகப்பெரிய சமூகத்தின் ஒரு அங்கம் என்பதை சுதந்திர தினம் நமக்கு நினைவூட்டுகிறது: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை appeared first on Dinakaran.

Tags : Independence Day ,President ,the Republic Droubati Murmu ,Delhi ,President of the Republic Droubati Murmu ,
× RELATED பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு,...