×

ஒன்றிய பாஜக அரசால் பெரும் விளம்பரத்துடன் தொடங்கப்பட்ட ‘உதான் ‘ என்ற விமான சேவைத் திட்டம் படுதோல்வி: சிஏஜி ஆய்வில் அம்பலம்

சென்னை: ஒன்றிய பாஜக அரசால் பெரும் விளம்பரத்துடன் தொடங்கப்பட்ட ‘உதான் ‘ என்ற விமான சேவைத் திட்டம் படுதோல்வி அடைந்துள்ளது. நடுத்தர நகரங்களுக்கும் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்குவதே உதான் திட்டத்தின் நோக்கமாகும், 2016ல் உருவாக்கப்பட்ட தேசிய பயணிகள் விமான சேவை கொள்கைப்படி ஆர்சிஎஸ் என்ற வட்டார தொடர்புத் திட்டம் அறிமுகமானது.

தமிழ்நாட்டில் சேலம், தஞ்சாவூர், ராமநாதபுரம், வேலூர் நகரங்களுக்கு உதான் திட்டத்தில் விமான சேவை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது. திட்டமிடப்பட்ட 4 நகரங்களில் சேலத்துக்கு மட்டுமே உதான் திட்டத்தில் விமானம் இயக்கப்பட்டது. ராமநாதபுரம், தஞ்சாவூர், வேலூருக்கு உதான் திட்டத்தில் விமானங்கள் இயக்கப்படவே இல்லை, நாடு முழுவதும் உதான் திட்டம் 1,2,3 என 3. கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. முதல்கட்டத்தில் 132 வழித்தடங்களிலும் 2வது கட்டத்தில் 228 வழித்தடங்களிலும் 3வது கட்டத்தில் 305 வழித்தடங்களிலும் விமானம் இயக்கப்படவில்லை என்று அம்பலமாகியுள்ளது.

திட்டமிடப்பட்ட 774 வழித்தடங்களில் 403 தடங்களில் விமான சேவை கடைசி வரை தொடங்கப்படவே இல்லை, மொத்தத்தில் உதான் திட்டத்தில் 774 தடங்களில் விமான சேவை வழங்க முடிவு செய்ததில் 7% தடங்களில் மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகின்றன. 774ல் உதான் திட்டத்தில் 371 நகரங்களுக்கு மட்டுமே முதல்கட்டமாக விமானங்கள் இயக்கப்பட்டன, சிறு நகரங்களுக்கு இயக்குவதாக விமான நிறுவனங்களுக்கு ஆகும் கூடுதல் செலவை ஈடுகட்ட அரசு மானியம் வழங்கியது, அரசு மானியம் வழங்கிய 3 ஆண்டுகள் வரை 112 நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. ரூ. 1,089 கோடி செலவிடும் 83 வழித்தடங்களில் விமான சேவை தொடங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

The post ஒன்றிய பாஜக அரசால் பெரும் விளம்பரத்துடன் தொடங்கப்பட்ட ‘உதான் ‘ என்ற விமான சேவைத் திட்டம் படுதோல்வி: சிஏஜி ஆய்வில் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Udan ,Union Bajaka government ,CAG ,Chennai ,Union Rajaka government ,Dinakaran ,
× RELATED சிஏஜி அம்பலப்படுத்திய மோடி அரசின்...