×

நீட் படித்தால் தான் டாக்டரா இத்தனை நாட்கள் பார்த்த டாக்டர்கள் எல்லாம டுபாகூரா: ஒன்றிய அரசு மீது மருத்துவ மாணவன் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: நீட் படித்தால் தான் டாக்டரா..? இத்தனை நாட்கள் பார்த்த டாக்டர்கள் எல்லாம டுபாகூரா? என்று நீட் தேர்வில் அரசு ஒதுக்கீட்டில் சீட் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் நண்பர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். சென்னை குரோம்பேட்டையில் மாணவன் ெஜகதீஸ்வரன் என்ற மாணவன் நீட் தேர்வில் 400 மதிப்பெண் பெற்றார். ஆனால் அவரால் அரசு ஒதுக்கீட்டில் சீட் பெற முடியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவனின் நண்பன் பயாஸ்தீன் அளித்த பேட்டி: எங்க அப்பாவால பொருளாதார அடிப்படையில் நல்லா இருந்ததால தனியார் கல்லூரியில் எனக்கு ரூ.25 லட்சம் பணம் கொடுத்து டாக்டருக்கு சேர்த்து விட்டாரு. நான் பெற்ற மார்க் 160தான். இப்ப முரண்பாடு என்னவென்றால், காசு இருப்பவர் டாக்டர் ஆகிட முடியுமா? இப்ப காசு இருப்பவர் டாக்டராகிவிட்டால், அடுத்தது என்ன எதிர்பார்ப்பான். அவன் டாக்டருக்கு படித்துவிட்டு காசை எடுப்பதில் தான் குறியாக இருப்பானே தவிர மக்களுக்கு பணி செய்வதில் இருக்க மாட்டான். இப்ப நீட் தான் உண்மையான தேர்வு, டாக்டரை உருவாக்கும் தேர்வு என்றால், இத்தனை நாட்கள் நீங்கள் பார்த்த டாக்டர்கள் டுபாகூர் என்று நினைத்து இருக்கிறீங்களா. இத்தனை நாட்கள் நீட் இருந்ததா. எனக்கு கஷ்டமாக இருக்கு. என்னுடன் இருந்த ஜெகதீஷால் ரூ.25 லட்சம் கட்ட முடியவில்லை என்பதால், என்னை விட நல்ல படிக்கிற மாணவன். என்னைவிட இரண்டு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவன். அவனாலேயே டாக்டருக்கு சேரமுடியவில்லை என்றால், பொருளாதாரத்தின் அடிப்படையில் தான் எல்லாமே இருக்கிறது என்று சொல்கிறேன். அவன் 400 மதிப்பெண் எடுத்துள்ளான். அவனால டாக்டருக்கு சேர முடியவில்லை. அதற்கு காரணம் என்ன என்று எனக்கு புரியல. இந்த தேர்வை வைத்து என்ன சாதிக்க போறீங்க.

இன்னும் எத்தனை மாணவர்களை சாவடிக்க போகிறார்கள் இந்த ஒன்றிய அரசை ஆளுகிறவர்கள். ஜெகதீஸ்வரன் படித்தது உண்மையாக டாக்டர் ஆகவேண்டும் என்று தான். மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்றுதான் இருந்தார். 2 முறை முயற்சி செய்தார். மூன்றாவது ஆண்டு தான் எனது அப்பாவுக்காக நான் டாக்டர் ஆகவேண்டும் என்று சொன்னான். ெவளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் இருந்து அழைப்பு வந்தது. அவனுக்கு ஒரே காரணம் அவன் அப்பாவுடன் இருந்து தமிழ்நாட்டில் படிக்கவேண்டும் என்று தான். இவ்வாறு உயிரிழந்த மாணவனின் நண்பன் பயாஸ்தின் கூறினார்.

The post நீட் படித்தால் தான் டாக்டரா இத்தனை நாட்கள் பார்த்த டாக்டர்கள் எல்லாம டுபாகூரா: ஒன்றிய அரசு மீது மருத்துவ மாணவன் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Ellama Dubakura ,Union Government ,Chennai ,
× RELATED பருப்பு இறக்குமதி அனுமதியை ஒன்றிய...