×

சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் பயண நேரம் அதிகரிப்பு: இன்று முதல் அமலுக்கு வந்தது

நாகர்கோவில்: சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் பயண நேரம் அதிகரிக்கப்பட்டு நேர மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் எண் 16127 நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் இன்று (14ம் தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது. அந்த வகையில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 9 மணிக்கு பதிலாக 45 நிமிடங்கள் தாமதமாக 9.45 மணிக்கு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் திருச்சிக்கு பிற்பகல் 2 மணிக்கு பதில் 3 மணிக்கு வந்து சேரும். மதுரை சந்திப்புக்கு மாலை 4.25க்கு பதிலாக 5.40 மணிக்கு வந்து சேரும்.

நாகர்கோவில் சந்திப்புக்கு இரவு 9.20க்கு பதிலாக 10.25 மணிக்கு வந்து சேரும். பின்னர் 10.30 மணிக்கு பறப்படும். இரணியலுக்கு 9.49க்கு பதில் 10.50க்கு வந்து 10.51க்கு புறப்படும். குழித்துறையில் 10.05க்கு பதில் 11.07க்கு வந்து 11.09க்கு பறப்படும். இரவு 11.15 மணிக்கு திருவனந்தபுரம் செல்வதற்கு பதிலாக 12.20 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும். காலை 6.40க்கு செல்வதற்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக காலை 7.40க்கு குருவாயூர் சென்றடையும் வகையில் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் ரயில் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே துறை நாளுக்கு நாள் ரயில்களின் வேகத்தை அதிகரித்தும், பயண நேரத்தை குறைத்தும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அதற்கு நேர்மாறாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரத்தை அதிகரிக்க செய்திருப்பதற்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

The post சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் பயண நேரம் அதிகரிப்பு: இன்று முதல் அமலுக்கு வந்தது appeared first on Dinakaran.

Tags : Chennai Elumpur ,Guruvayur ,Express ,Nagarko ,Chennai Elumpur-Guruvayur Express ,Chennai Elethampur ,
× RELATED அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக...