
- இந்திய கம்யூன்
- கட்சி
- நிலை
- Mutharasan
- சென்னை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- மாநில செயலாளர்
- கவர்னர்
- NEET
- தின மலர்
சென்னை: ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேதகு ஆளுநர் ஆகஸ்ட் 15ம் தேதி மாலையில் வழங்கும் தேனீர் விருந்துக்கு வருமாறு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். அது கிடைக்கப் பெற்றோம்.
ஆனால், ஆளுநரின் நடவடிக்கைகளும், செயல்களும் அவரது அதிகார எல்லைகளை மீறி இருப்பதாலும், குறிப்பாக ‘நீட்’ தேர்வுக்கான விதிவிலக்கு கேட்ட மாணவரின் பெற்றோரை அவமதித்து, தற்போது அவரது பொறுப்பில் இல்லாத “நீட்” விலக்கு மசோதாவிற்கு எப்போதும் கையெழுத்து போடமாட்டேன் என்ற ஆத்திரமூட்டி, அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறையில் ஆளுநரின் தேனீர் விருந்து நிகழ்வை புறக்கணிப்பது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக 77வது சுதந்திர தின விழாவையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேனீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
The post விஸ்வரூபம் எடுக்கும் நீட் விவகாரம்!: ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இந்திய கம்யூ. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.