×

மர குடோனில் தீ விபத்து: மணலி புதுநகரில் பரபரப்பு

திருவொற்றியூர்: சென்னை மணலி புதுநகர் பகுதியில் வைத்தியலிங்கம் என்பவருக்கு சொந்தமான மர குடோன் உள்ளது. இங்கு கனரக வாகனத்தில் பொருட்கள் கொண்டுசெல்வதற்கு பயன்படுத்தும் பேலட் கட்டைகளை அடுக்கி வைத்திருந்தார். இன்று அதிகாலை அந்த கட்டைகள் தீப்பிடித்து எரிந்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவதிப்பட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மாதவரம், மணலி, கொளத்தூர் மற்றும் எண்ணூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 3 லட்சம் மதிப்பிலான கட்டைகள், இயந்திரங்கள் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மணலி போலீசார் வழக்குபதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரிக்கின்றனர்.

The post மர குடோனில் தீ விபத்து: மணலி புதுநகரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Pudunagar, Manali ,Thiruvottiyur ,Vaidhyalingam ,Manali Pudunagar ,Chennai ,
× RELATED எண்ணூரில் மதுபோதையில் காவலரை தாக்கிய...