×

சிறார் நலனை பாதுகாக்கவே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: கவர்ச்சிகர அறிவிப்பால் மக்களை அடிமையாக்கி சம்பாதிக்கின்றன: ஐகோர்டில் தமிழ்நாடு அரசு வாதம்

சென்னை: சிறார் நலனை பாதுகாக்கவே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவரப்பட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தடை செய்ய கோரி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவன் ஆகியோர் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் சிறார் நலனை பாதுகாக்கவே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. போனஸ் போன்ற கவர்ச்சிகர அறிவிப்புகளால் மக்களை அடிமையாக்கி ஆன்லைன் விளையாட்டு நிறுவங்கள் சம்பாதிக்கின்றன.

ஆன்லைனில் விளையாடுபவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியாது. கிளப்களில் மாலை நேரங்களில்தான் ரம்மி விளையாட அனுமதிக்கப்படுகிறது. ஆனால், ஆன்லைனில் எப்போதும் விளையாட முடியும் என்பதால் இதை முறைப்படுத்த இயலாது என்று அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டது. ஆன்லைன் நிறுவனங்கள் மக்களை சுரண்டி சூதாட்டம் நடத்துவது அடிப்படை உரிமையல்ல. இந்த வழக்கு விசாரணைக்கு உகாந்ததல்ல என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்தை நிறைவு செய்தார். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் பதில் வாதத்தை தொடந்து வழக்கை ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

The post சிறார் நலனை பாதுகாக்கவே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: கவர்ச்சிகர அறிவிப்பால் மக்களை அடிமையாக்கி சம்பாதிக்கின்றன: ஐகோர்டில் தமிழ்நாடு அரசு வாதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt ,iCourt ,Chennai ,Tamil Nadu Government ,Icord ,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...