![]()
சென்னை: ஓணம் பண்டிகையையொட்டி நாகர்கோவில் – பன்வெல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மலையாள மொழி பேசும் கேரள மக்கள் மற்றும் தென் தமிழகத்தில் கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த பண்டிகை 10 நாட்கள் வண்ணப் பூக்களை கொண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தாண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது.
ஓணம் பண்டிகையின்போது பயணிகள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் வகையில், அவ்வப்போது சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் – பன்வெல் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. ஆகஸ்ட் 22, 29 மற்றும் செப்.5ல் நாகர்கோவிலில் இருந்து மகாராஷ்டிரா பன்வெல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஆகஸ்ட் 24, 31 மற்றும் செப்டம்பர் 7ல் பன்வெல்லில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஏசி பெட்டிகள், 11 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2 பொது பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post ஓணம் பண்டிகையையொட்டி நாகர்கோவில் – பன்வெல் இடையே சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.
