×

தஞ்சாவூர் பகுதிகளில் திருட்டு போன ரூ.11 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் மீட்பு

*உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் பகுதிகளில் திருட்டு போன ரூ.11 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் நவீன தொழில்நுட்பத்ைத பயன்படுத்தி மீட்கப்பட்டன. அவற்றை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம், ரயில் நிலையம், பெரிய கோவில் உள்பட பல்வேறு இடங்களில் செல்போன்கள் திருட்டு போனதாக மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து எஸ்பி ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில், டிஎஸ்பி ராஜா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும் போலீசார் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஐஎம்இஐ நம்பரை கொண்டு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்போனை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கினர். அதில் அந்த செல்போன்கள் தஞ்சாவூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் சிலர் கடைகளில் வாங்கி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைகளுக்கு சென்று செல்போன்களை போலீசார் மீட்டனர்.இதுதவிர திருடு போனதை தஞ்சாவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சிலர் பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த செல்போன்களையும் போலீசார் கைப்பற்றினர். மேலம் சில செல்போன்கள் கீழே கிடந்ததாக பொதுமக்கள் சிலர் போலீசிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்துக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம், எலிசா நகர், புதிய வீட்டு வசதி வாரியம், மருத்துவக்கல்லூரி பகுதிகளில் காணாமல் போன 25 செல்போன்களையும் தனிப்படை போலீசார் கைப்பற்றினர். இவ்வாறு ரூ.11லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். நேற்று அந்த செல்போன்களை இன்ஸ்பெக்டர் சந்திரா முன்னிலையில் டிஎஸ்பி ராஜா உரியவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது இனிமேலாவது செல்போன்கள் திருடு போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று டிஎஸ்பி ராஜா அறிவுறுத்தினார்.

The post தஞ்சாவூர் பகுதிகளில் திருட்டு போன ரூ.11 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மருத்துவமனை வளாகத்தில்...