×

எஸ்பி தலைமையில் வனத்துறை, கலால் போலீசார் அதிரடி அல்லேரி, பீஞ்சமந்தை மலைப்பகுதிகளில் ரெய்டு

*தப்பியோடிய 2 பேருக்கு வலை

வேலூர் : வேலூர் எஸ்பி மணிவண்ணன் தலைமையில் வனத்துறை, கலால் போலீசார் இணைந்து அல்லேரி, பீஞ்சமந்தை மலைகளில் போலீசார் சாராய ரெய்டு நடத்தினர். இதில் தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் ஜவ்வாதுமலை கிராமங்களிலும், அவற்றையொட்டிய வனப்பகுதிகளிலும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு மலையடிவார கிராமங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கள்ளச்சாராய நடமாட்டத்தை தடுக்க சட்டம்-ஒழுங்கு போலீசார் மட்டுமின்றி, மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரும் தனித்தனியாகவும், ஒருங்கிணைந்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதேபோல் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கவும் தொடர் நடவடிக்கைகளை எஸ்பி மணிவண்ணன் தலைமையில் வேலூர் மாவட்ட ேபாலீசார் எடுத்து வருகின்றனர். இந்நடவடிக்கைகளில் பல்லாயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல், கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இதுதொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தொடர் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் வேலூர் எஸ்பி மணிவண்ணன் தலைமையில் வனத்துறையினர், கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் 30 பேர் கொண்ட குழுவினர் அல்லேரி, ஜார்தான்கொல்லை, பீஞ்சமந்தை என்று வேலூர் தாலுகாக்களை ஒட்டிய மலை கிராமங்களில் கள்ளச்சாராய ரெய்டில் ஈடுபட்டனர். அதேபோல் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நகராஜன் தலைமையிலும் சாராய ரெய்டு நடத்தினர். இதில் மலைப்பகுதிகளில் சாராய காய்ச்ச வைத்திருந்த அடுப்பு, சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்.

தொடர்ந்து நேற்று கலால் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் நேற்று நடந்த ரெய்டில், பீஞ்சமந்தை அருகே உள்ள தேக்குமரத்தூர் மலைகிராமத்தில் பேரல்களில் இருந்து சாராய ஊறலை அழித்தனர். சாராயம் காய்ச்ச வைத்திருந்த அடுப்புகளையும் அழித்தனர். இதில் தப்பியோடிய ராமசந்திரன், சண்முகம் ஆகிய 2 பேரை போலீசார் ேதடி வருகின்றனர்.

The post எஸ்பி தலைமையில் வனத்துறை, கலால் போலீசார் அதிரடி அல்லேரி, பீஞ்சமந்தை மலைப்பகுதிகளில் ரெய்டு appeared first on Dinakaran.

Tags : SP ,Forest Department ,Excise Police ,Aleri ,Bhinjamanthi hills ,Vellore ,Manivannan ,Allery ,Beenchamantha hills ,Dinakaran ,
× RELATED காட்டுத் தீ பரவுவது தடுக்கப்பட்டுள்ளது: வனத்துறை தகவல்