×

மத்திய பிரதேசத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரயிலில் வந்த 2,900 டன் கோதுமை

ஈரோடு : மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரயில் மூலம் 2,900 டன் கோதுமை மூட்டைகள் வந்தடைந்தது. தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு கோதுமை விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்ட மக்களுக்கு பொது விநியோக திட்டத்தில், விநியோகிப்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதிகளில் 2,900 டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது.

இந்த கோதுமை மூட்டைகள் மத்திய பிரதேசத்தில் இருந்து 47 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயிலில் நேற்று ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டிற்கு வந்தடைந்தது. இந்த கோதுமை மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி, ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோதுமை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மத்திய பிரதேசத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரயிலில் வந்த 2,900 டன் கோதுமை appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,Erode ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மத்தியபிரதேசத்தில் விளையாட்டின்போது இளைஞருக்கு நேர்ந்த சோகம்