×

நெய்வேலி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 20வது நாளாக நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்!

கடலூர்: நெய்வேலி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 20வது நாளாக நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் வாபஸ் ஆனது. நெய்வேலி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 20 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மத்திய தொழிலாளர் நல ஆணையம், ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் முன்னிலையில் என பலமுறை பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு உடன்பாடு எட்டப்படாததால் தோல்வியில் முடிவடைந்தது. இதனையடுத்து கடந்த 2 நாட்களாக ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டமும் மேற்கொண்டனர். தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டம் கோரிக்கைகள் தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனையடுத்து என்எல்சி நிர்வாகம், ஜீவா ஒப்பந்த தொழிலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் முன்னிலையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 22ம் தேதி வரும் தீர்ப்பினை என்எல்சி நிர்வாகமும், தொழிலாளர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் போராட்டம் தொடர்பாக ஒப்பந்த பணியாளர்கள் 20 மீது ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக வழங்கபட்ட நோட்டீஸ் மீது என்எல்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது என பேச்சுவார்த்தையில் தொழிலாளர்கள் வைத்த கோரிக்கைகளுக்கு நிர்வாகம் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும் மதியம் முதல் பணிக்கு செல்வதாக அறிவித்துள்ளதையடுத்து 20 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post நெய்வேலி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 20வது நாளாக நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்! appeared first on Dinakaran.

Tags : Neyveli NLC Jiva ,Cuddalore ,Dinakaran ,
× RELATED பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி