×

நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் நெல்லை வருகை..!!

நெல்லை: நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் நெல்லை வருகை தந்துள்ளனர். நாங்குநேரி சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவர் மற்றும் அவரது சகோதரி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உரிய சிகிச்சையும், உயரிய சிகிச்சையும் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில், நேற்றைய தினம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், பாதிக்கப்பட்ட மாணவர்களை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து மாணவர் கையில் அறுவை சிகிச்சை செய்ய ஸ்டான்லி மருத்துவர்கள் வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று காலை பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் ஸ்ரீதேவி தலைமையில் 3 பேர் கொண்ட மருத்துவர் குழு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். மாணவர் கையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இன்று மாலைக்குள் அறுவை சிகிச்சை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். நாளை பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சை தொடர்பான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் நெல்லை வருகை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Stanley Hospital ,Nanguneri incident ,Nellie ,Nanguneri ,Nanguneri… ,Nella ,Dinakaran ,
× RELATED நெல்லை-சென்னை ஆம்னி பஸ் கட்டணம்...