×

மாமல்லபுரத்தில் இன்று தொடங்க இருந்த சர்வதேச அலைச்சறுக்கு போட்டி மோசமான வானிலையால் நாளை ஒத்திவைப்பு..!!

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இன்று தொடங்க இருந்த சர்வதேச அலைச்சறுக்கு போட்டி மோசமான வானிலையால் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2023 ஆகஸ்ட் 14 முதல் 20 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச அலைச்சறுக்கு போட்டி 2023 – தொடக்க விழா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று சர்ப் டர்ஃப் கோவளம் கடற்கரையில்
நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு சர்ஃபிங் அசோசியேஷன் (TNSA), இந்திய சர்ஃபிங் ஃபெடரேஷன் (SF) இணைந்து, இந்தியாவில் முதன் முறையாக, சர்வதேச சர்ப் ஓப்பன் – தமிழ்நாடு (International Surf Open Tamil Nadu ) நடைபெறுகிறது. இதில் 12 நாடுகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டி இன்று தொடங்குவதாக இருந்தது.

இந்த பெருமைக்குரிய நிகழ்வானது வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தில்2023 ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறவிருந்த நிலையில் இன்று தொடங்க இருந்த சர்வதேச அலைச்சறுக்கு போட்டி மோசமான வானிலையால் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக கடலில் அலைகள் எழும்பாததால் போட்டி நாளை ஒத்திவைக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

The post மாமல்லபுரத்தில் இன்று தொடங்க இருந்த சர்வதேச அலைச்சறுக்கு போட்டி மோசமான வானிலையால் நாளை ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : International Surfing Competition ,Mamallapuram ,
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...