×

மணிப்பூரில் அதிகாரிகள் இனக்குழுக்கள் போல் பிரிந்து செயல்படுவதாக குற்றச்சாட்டு: உள்துறை அமைச்சகம் போட்ட உத்தரவு

இம்ப்ஹல்: மணிப்பூரில் அதிகாரிக்கள் இனக்குழுக்கள் போல் பிரிந்து செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் சமூக ஊடக குழுக்களில் இருந்து விலகும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. இது குறித்து உச்சநீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில் மணிப்பூர் மாநில அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் இனக்குழுக்களுக்கு ஆதரவாக பிரிந்து செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சமூக ஊடகங்களில் குழுக்களாக பிரிந்து வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் தங்கள் வகுப்புவாத கொள்கைகளை பரப்பும் வகையிலும் நடந்து கொள்வதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், அதை ஒடுக்கும் வகையில் மாநில அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் சமூக ஊடக குழுக்களில் இருந்து விலகும்படி மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து துறைகளுக்கும் உள்துறை அமைச்சக ஆணையர் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

The post மணிப்பூரில் அதிகாரிகள் இனக்குழுக்கள் போல் பிரிந்து செயல்படுவதாக குற்றச்சாட்டு: உள்துறை அமைச்சகம் போட்ட உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Manipur ,Ministry of Home Affairs ,Imphal ,
× RELATED கிளர்ச்சி குழுவுடன் பேச்சுவார்த்தை...