×

மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

 

நத்தம், ஆக. 14: நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 1973-74 ஆம் ஆண்டு பள்ளி இறுதி ஆண்டு (எஸ்எஸ்எல்சி என்னும் 11 ஆம் வகுப்பு) படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. வந்திருந்த அனைவரையும் மாணவர் பஞ்சாட்சரம் வரவேற்றார். இதில் அவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்கள் வைத்திலிங்கம், ஜெயபாலன், சேதுராமன், ராஜேந்திர சவுரா, புன்னைவனம், பாண்டியன், திருமலை உள்ளிட்ட ஆசிரியர்கள் முன் மாணவர்கள் தங்கள் பெயர்களை கூறி ஞாபகபடுத்தி அறிமுகமாகினர். தொடர்ந்து ஆசிரியர்களை கௌரவித்து அவர்களின் ஆசி உரையை பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை பிரின்ஸ் சுதர்சனம், ஹைதர் அலி, ராமச்சந்திரன், சகாதேவன், கணேசன் உள்ளிட்ட மாணவர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

The post மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Natham Thurakkamalam Government Model HC School ,
× RELATED திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் 8,283...