×

பெரியசேமூர், தண்ணீர் பந்தல் பகுதியில் இன்று மின் தடை

ஈரோடு, ஆக.14: ஈரோடு சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் செல்லும் மாணிக்கம்பாளையம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று (14ம் தேதி) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், நரிப்பள்ளம், இஎம்எஸ் நகர், மாமரத்துப்பாளையம், அம்மன் நகர், சக்திதேவி நகர், அம்பேத்கார் நகர், கணபதிநகர், ஈபிபி நகர், புல் முன் பகுதி, தென்றல் நகர், பெரியசேமூர், சின்ன சேமூர், தண்ணீர்பந்தல்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு நகரியம் மின் விநியோக செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஈரோடு தெற்கு மின் கோட்டத்திற்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (14ம்தேதி) நடைபெற உள்ளது. இதனால், உலகபுரம், வேலம்பாளையம், வெங்கிட்டியாம்பாளையம், தண்ணீர்பந்தல், ஞானிபாளையம், ஊஞ்சப்பாளையம், தேவணம்பாளையம், ராயபாளையம், கொத்துமுட்டிபாளையம், மைலாடி, நடுப்பாளையம், குடுமியாம்பாளையம், வேமாண்டம்பாளையம், முகாசி அனுமன்பள்ளி, அஞ்சுராம்பாளையம், வெள்ளிவலசு, பள்ளியூத்து, ராட்டைசுற்றிபாளையம், ராசாம்பாளையம், மந்திரிபாளையம், பூந்துஐற, சென்னிமலைபாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்
விநியோகம் இருக்காது என தெற்கு மின் விநியோக செய்பொறியாளர் நாச்சிமுத்து தெரிவித்துள்ளார்.

The post பெரியசேமூர், தண்ணீர் பந்தல் பகுதியில் இன்று மின் தடை appeared first on Dinakaran.

Tags : Periyasemur, Water Pond ,Erode ,Manikampalayam ,Erode Suriyampalayam ,Periyasemur, Water Pandal ,Dinakaran ,
× RELATED இருசக்கர வாகனம் மோதி டெய்லர் பலி