×

மீனாட்சியம்மன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

 

மதுரை, ஆக. 14: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடக்கிறது. தற்போது ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. இந்நிலையில் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினசரி பக்தர்கள் அதிகமாக கோயிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர்.

இதனால் 4 கோபுர வாசல்களிலும் அவர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதன் காரணமாக அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் வருகை அதிகம் இருந்ததால், கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகளிலும் கூட்டம் அலைமோதியது. வாரவிடுமுறை நாளில் பக்தர்கள் வருகை கூடுதலாக இருக்கும் என்பதால் அதிக எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

The post மீனாட்சியம்மன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Meenakshiyamman temple ,Madurai ,Madurai Meenakshiyamman Temple ,Avani Moola Festival… ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு