×

காட்டுமன்னார்கோவில் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளை

 

காட்டுமன்னார்கோவில், ஆக. 14: காட்டுமன்னார்கோவில் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகைகள், பணம், செல்போன், பைக் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பெருங்காலூர் தங்கமணி தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (32), கொத்தனார். இவர், தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் இரவு தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் இவர்கள் வீட்டினுள் புகுந்து பீரோவில் இருந்த ரூ. 60 ஆயிரம் வெள்ளி பொருட்கள் திருடி சென்றார்.

இதன் பின் இவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள சுபாஷின் தம்பி ராம்கி வீட்டில் புகுந்து 20 ஆயிரம் செல்போன் மற்றும் 10 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிவிட்டு, தூங்கிக்கொண்டிருந்த ராம்கி மனைவியின் தாலி செயினையும் அறுக்க மர்ம நபர் முயன்றார். அவர் கூச்சலிடவே உஷாரான மர்ம நபர் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடும்போது, பக்கத்து வீட்டில் நிறுத்தியிருந்த முகம்மது ஆரிப் மகன் தில்பர்தில் (32) என்பவர் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள பைக்கையும் திருடிக்கொண்டு அந்த பைக்கில் தப்பி சென்று விட்டார். தகவலின்பேரில் புத்தூர் போலீசார் கொள்ளை நடந்த வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காட்டுமன்னார்கோவில் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Kattumannarkoil ,Kattumannarkovi ,Dinakaran ,
× RELATED குறுவை சாகுபடி தீவிரம்