×

டூவீலர் விபத்தில் தாசில்தார் காயம்

 

திருப்புவனம், ஆக.14: திருப்புவனத்தில் டூவீலரில் சென்று கொண்டிருந்த தாசில்தார் மீது பின்னால் வந்த டூவீலர் மோதிய விபத்தில் தாசில்தார் காயமடைந்தார். திருப்புவனம் தாசில்தார் கண்ணன் பாக்யா நகரில் வசித்து வருகிறார். நேற்று காலை மகளுடன் டூவீலரில் பாக்யா நகருக்கு வந்தார். அப்போது வடகரையைச் சேர்ந்த சிவகாமி ஓட்டி வந்த டூவீலர், தாசில்தார் டூவீலரில் மோதியதில் கீழே விழுந்தனர்.

இதில் தாசில்தார் கண்ணன், அவரது மகள் மனோ ஆனந்தி(21), சிவகாமி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. திருப்புவனம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து திருப்புவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post டூவீலர் விபத்தில் தாசில்தார் காயம் appeared first on Dinakaran.

Tags : Tahsildar ,Tiruppuvanam ,Tirupuvanam ,Dinakaran ,
× RELATED திருப்புவனம் பாமக பிரமுகர் கொலை...