×

நெற்குப்பை பேரூராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை வழங்க வேண்டும்

சிவகங்கை, ஆக.14: சிவகங்கையில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் மணியம்மா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, மாவட்ட பொருளாளர் முத்துகருப்பன், மாவட்ட துணைச் செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் பாலு மற்றும் நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாநில செயலாளர் பூங்கோதை பேசியதாவது:தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பேரூராட்சி, நகராட்சிகளில் செயல்படுத்த விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இக்கோரிக்கையை செயல்படுத்துவோம் என திமுக சார்பில் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசு 37 பேரூராட்சிகள், 7 நகராட்சிகள், 14 மாநாகராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சிவகங்கை மாவட்டத்தில் நெற்குப்பை பேரூராட்சியில் 100நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதை விரைவாக செயல்படுத்தவும், இப்பேரூராட்சியில்
அனைவருக்கும் இத்திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

The post நெற்குப்பை பேரூராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Nenkupai Municipality ,Sivagangai ,Tamil Nadu Agricultural Labor Union District Council ,District ,Head ,Maniamma ,Nekkuppai Municipality ,Dinakaran ,
× RELATED திருப்புவனம் பகுதிக்கு நிலையான...