×

தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாட்டால் மக்கள் அவதி

சிவகாசி, ஆக. 14: விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாட்டால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திண்டுக்கல் மாவட்டத்தில் கட்சி கூட்டம், திருமணம், கோயில் திருவிழா போன்றவற்றுக்கு கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளையே அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றனர். இதனால் எழும் சத்தத்தால் குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோ யாளிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கி எழுப்பும் சத்தத்தால் பொதுமக்களின் செவித்திறன் பாதிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க குறைந்தளவில் ஒலி எழுப்பும் ஒலி பெருக்கிகளையே பயன்படுத்த வேண்டும் எனவும், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவோர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘‘ கூம்பு வடிவ குழாய்கள் பயன்படுத்தக்கூடாது. மேலும் 120 டெசிபல் வரையிலான ஒலி அழுத்தங்களை மட்டுமே நன்றாகக் கேட்க முடியும். இதன் அளவு அதிகரித்தால் செவிகள் பாதிக்கப்படும். இதனால் சவுண்ட் சர்வீஸ் கடை உரிமையாளர்களுக்கு இதுகுறித்து ஆலோசனை வழங்கியுள்ளோம். விதி மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு குறித்து பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

The post தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாட்டால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Sivakasi, Ga. 14 ,Virudhunagar district ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...