×

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

 

திருச்சுழி, ஆக. 14: திருச்சுழி அருகே ஜோகில்பட்டியில் எவிடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 1968-1969 மற்றும் 1969-1976ம் ஆண்டுகளில் 11 ம் வகுப்பு படித்த பழைய மாணவர்கள் பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்துக்கொண்ட மீள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல ஆண்டுகளுக்கு பின் தங்களுடன் படித்த பழைய நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சியில் ஒருவருக்கு ஒருவர் தங்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளையும் பள்ளி அனுபவங்களையும் கூறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் தங்கள் பள்ளி ஆசிரியர்களை கௌரவப்படுத்திய பழைய மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளிக்கு 2 தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்களையும், 2 பீரோ மற்றும் ஒரு கம்ப்யூட்டரையும் அன்பளிப்பாக வழங்கினர். பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு ஆசிரியர்களுக்கும் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பழைய மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கினர்.

The post முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thiruchuzhi ,AVD Government High School ,Jokilpatti ,Dinakaran ,
× RELATED திருச்சுழி அருகே கல்லூரணியில் 700...