×

குற்ற சம்பவங்களை தடுக்க கோயம்பேடு பஸ் நிலையத்தில் டிரோன் மூலம் கண்காணிப்பு: போலீசார் நடவடிக்கை

 

சென்னை, ஆக.14: கோயம்பேடு பேருந்து நிலையத்தில், குற்றச் சம்பவங்களை தடுக்க டிரோன் மூலம் கண்காணிக்க ேபாலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாக கோயம்பேடு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 4,000 பேருந்துகள் வந்து செல்லும் வசதி உள்ளது. இங்கிருந்து சென்னையின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினசரி பல்லாயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்னனர்.

இங்கு வரும் பயணிகளை குறிவைத்து செல்போன் மற்றும் செயின் பறிப்பு, கத்தியை மிரட்டி வழிப்பறி, பிக்பாக்கெட் மற்றும் மக்களை நூதனமுறையில் ஏமாற்றி பணம் பறிப்பது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடபெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் பேருந்து நிலையத்தில் தூங்கும் பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லைகளும் நடைபெறுகிறது. இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோயம்பேடு போலீசாருக்கு கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் போலீசார், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அவ்வப்போது கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

ஆனாலும் குற்றசம்பவங்களை தடுப்பது காவல்துறையினருக்கு சவாலாக உள்ளது. இந்நிலையில், சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் உத்தரவின்படி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் பாதுகாப்புக்காகவும், குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்டறியவும் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், பயணிகளை பாதுகாக்கவும், போதை ஆசாமிகள் மது அருந்துவதை கண்காணிக்கவும் நடவடிக்ைக எடுத்து வருகிறோம். பேருந்து நிலையத்தில் மது அருந்தி விட்டு தகராறில் ஈடுபட்டால் காவல் நிலையத்தில் பயணிகள் புகார் தெரிவிக்கலாம். தற்போது, பேருந்து நிலையத்தை டிரோன் மூலம் கண்காணித்து, குற்றவாளிகள் நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்,’’ என்றார்.

The post குற்ற சம்பவங்களை தடுக்க கோயம்பேடு பஸ் நிலையத்தில் டிரோன் மூலம் கண்காணிப்பு: போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Coimbade bus station ,Chennai ,Ag ,Coimbadu Bus Station ,Kepalisars ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...